சுந்தரம் பைனான்ஸ் நிறுவன வட்டி விகிதங்கள் மாற்றம்

ரிசர்வ் வங்கி அறி​வித்த ரெப்போ விகித மாற்​றத்தை தொடர்ந்து, சுந்​தரம் பைனான்ஸ் நிறு​வனம் வைப்​புத் தொகை வட்டி விகிதங்​களை மாற்றி அமைத்​துள்​ளது.

Jun 30, 2025 - 07:55
 0  4
சுந்தரம் பைனான்ஸ் நிறுவன வட்டி விகிதங்கள் மாற்றம்

சென்னை: ரிசர்வ் வங்கி அறி​வித்த ரெப்போ விகித மாற்​றத்தை தொடர்ந்​து, சுந்​தரம் பைனான்ஸ் நிறு​வனம் வைப்​புத் தொகை வட்டி விகிதங்​களை மாற்றி அமைத்​துள்​ளது. இதன்​படி, மூத்த குடிமக்​களுக்​கான வைப்​பு தொகைக்​கு, 12 மாதங்​களுக்கு 7.2%, 24 மற்றும் 36 மாதங்​களுக்கு 7.5% வட்டி நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இது​போல பிற வாடிக்​கை​யாளர்​களுக்​கான வைப்​புத் தொகைக்​கு, 12 மாதங்​களுக்கு 6.7%, 24 மற்​றும் 36 மாதங்​களுக்கு 7% வட்டி நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

இது வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. சுந்​தரம் பைனான்ஸ் நிறு​வனம், டிஜிட்​டல் வைப்​புத் தொகை வசதியை சமீபத்​தில் அறி​முகப்​படுத்​தி​யது. இது, சேமிப்பை இது​வரை இல்​லாத வகை​யில் எளி​தாக​வும், பாது​காப்​பாக​வும், எளிமை​யாக அணுகக்​கூடிய​தாக​வும் மாற்​றி​யுள்​ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow