சிவகார்த்திகேயன் vs விஜய் ஆண்டனி - ‘பராசக்தி’ டைட்டில் மோதல்: பின்னணி என்ன? 

சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்துக்கு ‘பராசக்தி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது

Jan 29, 2025 - 23:10
 0  3
சிவகார்த்திகேயன் vs விஜய் ஆண்டனி - ‘பராசக்தி’ டைட்டில் மோதல்: பின்னணி என்ன? 

சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்துக்கு ‘பராசக்தி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஆகாஷ் பாஸ்கரன் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படம் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் 100-வது படமாகும். அத்துடன் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 25-வது படம். இப்படத்தின் டைட்டில் டீசரை படக்குழு புதன்கிழமை வெளியிட்டது. அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்னரே படத்தின் தலைப்பு ‘பராசக்தி’ என்ற தகவல் இணையத்தில் வெளியாகிவிட்டது.

இப்படியான சூழலில் படத்தின் டைட்டில் டீசர் புதன்கிழமை வெளியாகும் என்று படக்குழு அறிவித்தபிறகு, அதே நாளில் காலை 11 மணியளவில் தனது புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் விஜய் ஆண்டனி. அப்படத்துக்கு தமிழில் ஒரு தலைப்பும், தெலுங்கில் ஒரு தலைப்பும் வைக்கப்பட்டிருந்தது. தமிழில் ‘சக்தி திருமகன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள அப்படத்துக்கு தெலுங்கில் ‘பராசக்தி’ என்று வைத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow