‘சில நேரங்களில் மருந்துகள் அவசியம்’ - பரஸ்பர வரி அதிர்வலைகளுக்கு ட்ரம்ப் விளக்கம்!

“எதையாவது சரி செய்ய வேண்டுமென்றால் சில நேரங்களில் மருந்து அவசியம் தானே” என்று தனது வரிவிதிப்பு நடவடிக்கையை நியாயப் படுத்திப் பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

Apr 7, 2025 - 10:10
 0  4
‘சில நேரங்களில் மருந்துகள் அவசியம்’ - பரஸ்பர வரி அதிர்வலைகளுக்கு ட்ரம்ப் விளக்கம்!

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டுப் பொருட்களுக்கு வரி விகிதங்களை உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பால் வெள்ளிக்கிழமை அமெரிக்க பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. இது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ட்ரம்ப், “எதையாவது சரி செய்ய வேண்டுமென்றால் சில நேரங்களில் மருந்து அவசியம் தானே” என்று தனது வரிவிதிப்பு நடவடிக்கையை நியாயப் படுத்திப் பேசியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை ஃப்ளோரிடாவில் கோல்ஃப் விளையாடிவிட்டு வாஷிங்டன்னுக்கு திரும்பிய ட்ரம்ப் விமானத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow