சிராஜ் அபார பந்துவீச்சு: ஓவல் டெஸ்ட்டில் இங்கிலாந்தை 6 ரன்களில் இந்தியா வீழ்த்தியது எப்படி?

முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோரது அபாரமான பந்து வீச்சால் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Aug 5, 2025 - 10:00
 0  3
சிராஜ் அபார பந்துவீச்சு: ஓவல் டெஸ்ட்டில் இங்கிலாந்தை 6 ரன்களில் இந்தியா வீழ்த்தியது எப்படி?

லண்டன்: முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோரது அபாரமான பந்து வீச்சால் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 2-2 என டிரா செய்தது.

லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 374 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 76.2 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்தது. ஹாரி புரூக் 111, ஜோ ரூட் 105 ரன்கள் விளாசினர். ஜேமி ஸ்மித் 2, ஜேமி ஓவர்டன் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow