சிம்மம் ராசிக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2025
சிம்மம் ராசிக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2025

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1- ஆம் பாதம்) கிரகநிலை: 26.04.2025 அன்று ராகு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 26.04.2025 அன்று கேது பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
பலன்கள்: சிம்ம ராசி அனபர்களே! இந்த பெயர்ச்சியில் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணம் எதிர்பார்த்த அளவுக்கு வந்து கொண்டிருக்கும். உங்களின் முயற்சிகளைச் செம்மைப்படுத்தி காரியங்களை ஆற்றி வெற்றி பெறுவீர்கள். புதிய சேமிப்புத் திட்டங்களிலும் ஈடுபடுவீர்கள். சிலர் புதிய வீடு வாங்கி கிரகப்பிரவேசம் செய்வார்கள். உங்களின் அசாத்திய துணிச்சலால் செயற்கரிய சாதனைகளைச் செய்வீர்கள். மறக்க முடியாத விதத்தில் அரசு வழியில் சில சலுகைகள் கிடைக்கும். முக்கியமானவர்களுடன் பேசும்போது உங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் உண்டாகும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள் மேலும் உங்களிடம் மற்றவர்கள் சொன்ன ரகசியங்களையும் காப்பாற்றுவீர்கள். இதனால் நண்பர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். அதே நேரம், இந்த காலகட்டத்தில் உங்களிடம் பணம் பெற்றவர்கள் நன்றி பாராட்டுவது குறைவாகவே இருக்கும். மேலும் உடல் உபாதைகளை அலட்சியப்படுத்தினால் பெரிய மருத்துவச் செலவுகள் செய்யுமாறு நேரிடலாம்.
What's Your Reaction?