சிம்மம் ராசிக்கான 2025 புத்தாண்டு பலன்கள் முழுமையாக!

சூரியனை ராசிநாதனாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே, 2025-ம் ஆண்டு மனதில் உத்வேகம் உருவாகி உயர்வான செயல்களைச் செய்வீர்கள். முன்வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். நீங்கள் யாரையாவது நம்பி விட்டால் வாரி வழங்கி விடுவீர்கள். எடுத்த முடிவில் இருந்து சிறிதும் இறங்கி வர மாட்டீர்கள்.

Dec 17, 2024 - 19:35
 0  4
சிம்மம் ராசிக்கான 2025 புத்தாண்டு பலன்கள் முழுமையாக!

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) சூரியனை ராசிநாதனாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே! இந்த ஆண்டு மனதில் உத்வேகம் உருவாகி உயர்வான செயல்களைச் செய்வீர்கள். முன்வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். நீங்கள் யாரையாவது நம்பி விட்டால் வாரி வழங்கி விடுவீர்கள். எடுத்த முடிவில் இருந்து சிறிதும் இறங்கி வர மாட்டீர்கள்.

குடும்பம்: கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். மூத்த சகோதரர் வழிசார்ந்த உறவினர்களால் அனுகூலமான பலன்கள் உருவாகும் . இதனால் மனம் மகிழ்ச்சி கொள்ளும். சமூக காரியங்களில் தலையிட்டு திறம்பட பணியாற்றி நற்பெயர் பெறுவீர்கள். அரசு சார்ந்த மற்றும் தனியார் வங்கிகளின் உதவிகளை பெற்று வீடு மற்றும் மனைகளை வசதிக்கேற்ப மாறுதல் செயவீர்கள். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் உங்கள் எண்ணத்திற்கேற்ப நடந்து கொண்டு நற்பெயரை காப்பாற்றுவர்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow