சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டன்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.

Mar 20, 2025 - 07:00
 0  4
சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டன்

மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் வரும் 23-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா களமிறங்க முடியாத சூழ்நிலை உள்ளது.

கடந்த சீசனில் 3 ஆட்டங்களில் ஓவர்கள் வீச மும்பை அணி அதிக நேரம் எடுத்துக் கொண்டிருந்தது. இதனால் இந்த விவகாரத்தில் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு ஆட்டத்தில் விளையாட தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா விளையாட முடியாது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow