சார்லி கிக் கொலையாளிக்கு மரண தண்டனை கிட்டும்: ட்ரம்ப் நம்பிக்கை
அமெரிக்காவின் ஆளும் குடியரசு கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான சார்லி கிர்கை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று தான் நம்புவதாகவும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஆளும் குடியரசு கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான சார்லி கிக்கை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று தான் நம்புவதாகவும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலின்போது குடியரசு கட்சிக்கு ஆதரவாக மிகத் தீவிரமாக பிரச்சாரம் செய்தவர் சார்லி கிர்க். கடந்த 10-ம் தேதி அமெரிக்காவின் யூட்டா மாகாணம், ஓரமில் உள்ள யூட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சார்லி கிக் பங்கேற்றபோது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார்.
What's Your Reaction?