சாய் அபியங்கர் - மீனாட்சி சவுத்ரி காம்போவில் ‘சித்திர புத்திரி’ பாடல் வீடியோ எப்படி?

பிரபல பாடகர் தம்பதிகளான திப்பு - ஹரிணியின் மகன் தான் சாய் அபியங்கர். இவர் கடந்த ஆண்டு தொடக்கத்தில் ‘கட்சி சேர’ என்னும் பாடலை பாடி, இசையமைத்து வெளியிட்டிருந்தார். இப்பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலானது.

Feb 1, 2025 - 18:15
 0  2
சாய் அபியங்கர் - மீனாட்சி சவுத்ரி காம்போவில் ‘சித்திர புத்திரி’ பாடல் வீடியோ எப்படி?

பிரபல பாடகர் தம்பதிகளான திப்பு - ஹரிணியின் மகன் தான் சாய் அபியங்கர். இவர் கடந்த ஆண்டு தொடக்கத்தில் ‘கட்சி சேர’ என்னும் பாடலை பாடி, இசையமைத்து வெளியிட்டிருந்தார். இப்பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலானது. அதனை தொடர்ந்து, 'ஆசை கூட' என்னும் பாடலை வெளியிட்டார். அதுவும் இணையத்தில் வைரலானது.

இந்த வரிசையில், அவர் இசையமைத்த ‘சித்திர புத்திரி’ என்னும் புதிய பாடலை நடிகர் சூர்யா வெளியிட்டார். இந்தப் பாடலில் நடிகை மீனாட்சி சவுத்ரி நடனமாடியுள்ளார். மன்னர் ஒருவர் ஒரு தீவில் மறைத்து வைத்துள்ள ஒரு பொருளை பலர் அடைய முயற்சிக்கின்றனர். அதை சாய் அபியங்கரும் தேடி போவது போல அமைந்துள்ளது இப்பாடல். 'இல்ல இல்ல அந்த பொம்ம பிள்ள போல யாரும் இல்ல' போன்ற வரிகளுடன் ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளது இப்பாடல்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow