சவரன் ரூ.60,000-ஐ தாண்டியது: தங்கம் விலை மென்மேலும் உயருமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.60 ஆயிரத்தை தாண்டி, தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சத்தை பதிவு செய்தது. ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.60,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.60 ஆயிரத்தை தாண்டி, தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சத்தை பதிவு செய்தது. ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.60,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. டிச.8-ம் தேதிக்கு பிறகு, தங்கம் விலை உயர்ந்து வந்தது. ஜன.3-ம் தேதி ரூ.58,080 ஆகவும், ஜன.16-ம் தேதி ரூ.59,120 ஆகவும் இருந்தது. விரைவில் பவுன் தங்கம் ரூ.60 ஆயிரத்தை தொடும் என்று சந்தை நிபுணர்கள், தங்க நகை வியாபாரிகள் கணித்திருந்தனர். இந்நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.60 ஆயிரத்தை தாண்டி, புதிய விலை உச்சத்தை தொட்டது.
What's Your Reaction?