சபரிமலை சீசன்: சென்னை - கொச்சி இடையே விமான சேவை அதிகரிப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் தொடங்கியுள்ளதால், தினமும் சென்னை - கொச்சி - சென்னை இடையே விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Nov 16, 2024 - 18:45
 0  16
சபரிமலை சீசன்: சென்னை - கொச்சி இடையே விமான சேவை அதிகரிப்பு

சென்னை: சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் தொடங்கியுள்ளதால், தினமும் சென்னை - கொச்சி - சென்னை இடையே விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் இருந்து தினமும் காலை 6.30 மணியிலிருந்து இரவு 9:25 மணி வரையில் 8 புறப்பாடு விமானங்கள் கொச்சிக்கும் மற்றும் கொச்சியில் இருந்து தினமும் காலை 10.20 மணியிலிருந்து இரவு 11.05 மணி வரையில் 8 வருகை விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல், சென்னை- பெங்களூர்- கொச்சி இடையே இணைப்பு விமானங்களாக தினமும் 3 புறப்பாடு விமானங்களும், 3 வருகை விமானங்களும் மொத்தம் 6 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow