கொடியேற்றத்துக்கு தர்பை தயார்: திருப்பதி பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்

திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லின் வரு​டாந்​திர பிரம்மோற்சவம் நாளை (செப். 24) மாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்​ளது. அக்​டோபர் 2-ம் தேதி வரை நடை​பெற உள்ள இந்த விழா​வில் பல்லாயிரக்கணக்கான பக்​தர்​கள் பங்கேற்கின்றனர். 

Sep 23, 2025 - 08:50
 0  3
கொடியேற்றத்துக்கு தர்பை தயார்: திருப்பதி பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்

திருமலை: திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லின் வரு​டாந்​திர பிரம்​மோற்​சவம் நாளை (செப். 24) மாலை கொடியேற்​றத்​துடன் தொடங்க உள்​ளது. அக்​டோபர் 2-ம் தேதி வரை நடை​பெற உள்ள இந்த விழா​வில் பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் பங்கேற்கின்றனர்.

நாளை புதன்​கிழமை மாலை கோயி​லில் உள்ள தங்க கொடி மரத்​தில் கருடன் சின்​னம் பொறித்த கொடி ஏற்​றப்​படு​கிறது. இதற்​காக கொடி மரத்​தில் சுற்​றி​லும் அமைக்​கப்பட உள்ள புனித தர்பை புற்​களை​யும் பிரம்​மோற்சவ கொடியை கட்​டு​வதற்​கான புனித கயிற்​றை​யும் நேற்று தேவஸ்​தான ஊழியர்​கள் ஊர்​வல​மாக கொண்டு வந்து அதி​காரி​களிடம் ஒப்​படைத்​தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow