கைவிடப்பட்ட ‘கிரிஷ்மா’ திட்டத்தை செயல்படுத்துக: கிருஷ்ணகிரி மா விவசாயிகள் கோரிக்கை
கிருஷ்ணகிரியில் மாங்கூழ் பதப்படுத்தவும், சந்தைப்படுத்தவும் அரசால் அறிவிக்கப்பட்டு, கைவிடப்பட்ட ‘கிரிஷ்மா’ திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

கிருஷ்ணகிரியில் மாங்கூழ் பதப்படுத்தவும், சந்தைப்படுத்தவும் அரசால் அறிவிக்கப்பட்டு, கைவிடப்பட்ட ‘கிரிஷ்மா’ திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் மா உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதன்மையிடத்தில் உள்ளது. இங்கு 35 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 3 லட்சம் மெட்ரிக் டன் மா உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக வறட்சி மற்றும் மாங்கூழ் ஆலை நிர்வாகிகளின் சிண்டிகேட் அமைத்து உரிய விலையில் மாங்காய் கொள்முதலைத் தவிர்த்தல் உள்ளிட்ட காரணங்களால் மா விவசாயிகள் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.
What's Your Reaction?