கூலி உயர்வை அமல்படுத்த கோரி ஜூன் 16-ல் விசைத்தறியாளர்கள் உண்ணாவிரதம்

அரசு பேச்சுவார்த்தையின்படி கூலி உயர்வை அமல்படுத்த வலியுறுத்தி வரும் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை விசைத்தறியாளர்கள் 3 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

Jun 7, 2025 - 21:30
 0  5
கூலி உயர்வை அமல்படுத்த கோரி ஜூன் 16-ல் விசைத்தறியாளர்கள் உண்ணாவிரதம்

திருப்பூர்: அரசு பேச்சுவார்த்தையின்படி கூலி உயர்வை அமல்படுத்த வலியுறுத்தி வரும் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை விசைத்தறியாளர்கள் 3 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டம் சோமனூர் சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை நடந்தது. சங்க தலைவர் ச.ஈ.பூபதி தலைமை வகித்தார். அவிநாசி சங்க தலைவர் என்.எம்.முத்துசாமி, புதுப்பாளையம் சங்க தலைவர் வி.நடராஜ், கண்ணம்பாளையம் சங்க தலைவர் ஆர்.வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow