குரு பெயர்ச்சி பொதுப் பலன்கள் 14.05.25 முதல் 01.06.26 வரை | ஒரு பார்வை
குரு பெயர்ச்சி பொது பலன்கள் 14.05.25 முதல் 01.06.26 வரை | ஒரு பார்வை

குரு என்பவர் நம் அறியாமை இருளை விலக்கி, ஒளியின் வழியைக் காட்டுபவர். குருநாதரைப் பார்த்து ஆசீர்வாதம் வாங்கிய பிறகுதான் நமக்கு நிம்மதியாக உள்ளது. பள்ளியில், பல்கலைக்கழகத்தில் நாம் படித்துபோது, பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டபோது, நம் அறிவுக்கு எட்டாத பல சம்பவங்கள் நடந்தபோது, நாம் முடிவெடுக்க முடியாமல் திணறிப் போயிருப்போம். அந்த நேரத்தில் நமக்கு ஒரு வழிகாட்டியாக, நல் ஆலோசனை வழங்கக் கூடிய வகையில் யார் இருந்தார்களோ அவர்களை நாம் குருவாக ஏற்றுக் கொண்டிருப்போம்.
சனிப்பெயர்ச்சி, ராகு - கேதுப் பெயர்ச்சி ராசிபலன்களை ஒருவித பயத்தோடு படிக்கும் நாம், குருப் பெயர்ச்சி பலனை படிக்கும்போது மட்டும் நமக்கு நல்லதுதான் நடக்கும், குரு பகவான் நமக்கு நல்லது தான் செய்வார், நம்மை அவர் கஷ்டப்படுத்த மாட்டார் என்ற நம்பிக்கையுடன் படிக்கிறோம். சுயநலம் இல்லாமல், சொத்துகளுக்கு விருப்பப்படாமல், குறுக்கு வழியில் சம்பாதிக் காமல், பிறர் மனதைப் புண்படுத்தாமல், உண்மையைப் பேசி, சாத்வீகமாக வாழ்ப வர்கள் அனைவரும் குருவின் அம்சமாகப் பிறந்தவர்கள் ஆவர்.| முழுமையான பலன்களுக்கு > மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
What's Your Reaction?