கும்பம் ராசிக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2025

கும்பம் ராசிக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2025

Apr 26, 2025 - 16:20
 0  4
கும்பம் ராசிக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2025

கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - 26.04.2025 அன்று ராகு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார் | 26.04.2025 அன்று கேது பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: கும்ப ராசி அன்பர்களே! இந்த பெயர்ச்சியில் உங்கள் காரியங்களில் கூடுதல் அக்கறை காட்டுவீர்கள். சந்தேகத்துக்கு இடமான விஷயங்களை ஒன்றுக்கு இரண்டு முறை செயல்படுத்துவீர்கள். செய்தொழிலை விரிவுபடுத்த சிறிது கடன் வாங்கவும் நேரலாம். உங்கள் பேச்சைத் திரித்து புரிந்துக் கொள்ள வாய்ப்புள்ளதால், வெளியில் பேசும்போது வார்த்தைகளை அளந்து பேசவும். நெடுநாளாக விற்பனை ஆகாமல் இருந்த சொத்துக்கள் சிறிய தாமதத்துக்குப் பிறகே விற்பனையாகும். உடல் ஆரோக்கியத்திலும் சிறு சிறு தொல்லைகள் வந்தாலும்,மருத்துவச் சிகிச்சையால் அனைத்தும் சரியாகிவிடும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow