‘குபேரா’வின் உலகத்துக்கு அழைக்கும் ராஷ்மிகா

தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், தலிப் தாஹில் உள்பட பலர் நடித்துள்ள படம், 'குபேரா’.

May 28, 2025 - 08:40
 0  3
‘குபேரா’வின் உலகத்துக்கு அழைக்கும் ராஷ்மிகா

தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், தலிப் தாஹில் உள்பட பலர் நடித்துள்ள படம், 'குபேரா’. சேகர் கம்முலா இயக்கியுள்ள இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 20-ம் தேதி வெளியாகிறது.

தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். அவர் இசையில் இம்மாதத் தொடக்கத்தில் வெளியான ‘போய் வா நண்பா’ பாடல் டிரெண்டானது. இந்நிலையில் இந்தப் படத்தின் 2 நிமிட ‘டிரான்ஸ்’ எனப்படும் டீஸர், வெளியாகியுள்ளது. தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா, ஜிம் சர்ப் ஆகியோரை அறிமுகப்படுத்தும் இந்த டீஸர் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுகுறித்து ராஷ்மிகா மந்தனா கூறும்போது “நாங்கள் பேரன்பை ஊற்றி இந்தப் பயணத்தை உங்களுக்காக நடத்தி இருக்கிறோம். குபேராவின் உலகத்துக்கு வருக" என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow