குபேரா: விமர்சனம் - தனுஷின் ‘அசுர’ நடிப்புக்கு பலன் கிட்டியதா?

‘வாத்தி’ படத்துக்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள நேரடி தெலுங்கு படம். தேசிய அளவில் பல விருதுகளை குவித்த சேகர் கம்முலாவுடன் முதல் முறையாக தனுஷ் இணைகிறார் என்ற அறிவிப்பு வெளியானதுமே ‘குபேரா’ படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவியது

Jun 20, 2025 - 15:35
 0  3
குபேரா: விமர்சனம் - தனுஷின் ‘அசுர’ நடிப்புக்கு பலன் கிட்டியதா?

‘வாத்தி’ படத்துக்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள நேரடி தெலுங்கு படம். தேசிய அளவில் பல விருதுகளை குவித்த சேகர் கம்முலாவுடன் முதல் முறையாக தனுஷ் இணைகிறார் என்ற அறிவிப்பு வெளியானதுமே ‘குபேரா’ படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவியது. படத்தின் ட்ரெய்லரும் ஆர்வத்தை தூண்டும் வகையில் ‘கட்’ செய்யப்பட்டிருந்தது. இத்தகைய எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்ததா ‘குபேரா’?

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் நீரஜ் மித்ரா (ஜிம் சர்ப்). அரசாங்கத்தை கைக்குள் வைத்துக் கொண்டு நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்பவர். தமிழக கடல் பகுதியில் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்படும் தகவல் அரசாங்கத்துக்கு முன்பே அவருக்கு கசிந்து விடுகிறது. அதை பொதுமக்களுக்கு தெரியவிடாமல், தன்னிடம் ஒப்படைத்தால் கிடைக்கப் போகும் பலன்களை கூறி மத்திய அமைச்சரிடம் டீல் பேசுகிறார். இதற்காக பெரும் தொகையை கைமாற்ற திட்டமிடப்படுகிறது. இந்த வேலையை செய்து முடிக்க செய்யாத குற்றத்துக்கு ஜெயிலில் இருக்கும் முன்னாள் சிபிஐ அதிகாரி தீபக்கை (நாகர்ஜுனா) நாடுகிறார் நீரஜ். முதலில் மறுக்கும் தீபக் பின்னர் தன் குடும்பத்தை எண்ணி ஒப்புக் கொள்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow