குஜராத்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத்: அகமதாபாத்தில் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

May 2, 2025 - 08:00
 0  3
குஜராத்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத்: அகமதாபாத்தில் இன்று பலப்பரீட்சை

அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் 9 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. அந்த ஆட்டத்தில் 209 ரன்களை குவித்த போதிலும் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி சதத்தால் குஜராத் அணி தோல்வி அடைய நேரிட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow