கிருஷ்ணகிரியில் சிறு, குறு விவசாயிகள் மா மரங்களை வெட்டி அகற்றுவது ஏன்?

மாங்காய்க்கு உரிய விலை கிடைக்காத நிலையில், போச்சம்பள்ளி பகுதியில் மாந்தோட்டங்களில் மரங்களை வெட்டி அகற்றி விட்டு, மாற்றுப் பயிர் சாகுபடிக்கு நிலத்தை சீர் செய்யும் பணியில் சிறு, குறு விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்

Jun 18, 2025 - 14:45
 0  3
கிருஷ்ணகிரியில் சிறு, குறு விவசாயிகள் மா மரங்களை வெட்டி அகற்றுவது ஏன்?

மாங்காய்க்கு உரிய விலை கிடைக்காத நிலையில், போச்சம்பள்ளி பகுதியில் மாந்தோட்டங்களில் மரங்களை வெட்டி அகற்றி விட்டு, மாற்றுப் பயிர் சாகுபடிக்கு நிலத்தை சீர் செய்யும் பணியில் சிறு, குறு விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 35 ஆயிரம் ஹெக்டேருக்கும் மேல் மா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சத்து 52 ஆயிரத்து 436 மெட்ரிக் டன் மாங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இம்மாவட்டத்தில் மா விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்டு 1 லட்சத்துக்கும் அதிகமான சிறு, குறு மற்றும் பெரிய விவசாயிகள் உள்ளனர். ஆண்டுதோறும் மா விவசாயிகள் பல்வேறு சிரமங்களையும், வருவாய் இழப்பையும் சந்தித்து வருவவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow