கிரிக்கெட் வீராங்கனை கமாலினி, கோ-கோ வீரர் சுப்ரமணிக்கு தலா ரூ.25 லட்சம் ஊக்கத் தொகை: முதல்வர் ஸ்டாலின்
19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணியின் வெற்றிக்கு பங்களித்த தமிழக கிரிக்கெட் வீராங்கனை கமாலினி, கோ-கோ உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல பங்களித்த வீரர் வி.சுப்ரமணி ஆகியோருக்கு தமிழக அரசின் உயரிய ஊக்கத்தொகையாக தலா ரூ.25 லட்சம் வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை: 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணியின் வெற்றிக்கு பங்களித்த தமிழக கிரிக்கெட் வீராங்கனை கமாலினி, கோ-கோ உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல பங்களித்த வீரர் வி.சுப்ரமணி ஆகியோருக்கு தமிழக அரசின் உயரிய ஊக்கத்தொகையாக தலா ரூ.25 லட்சம் வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மலேசியாவில் 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் ஜன. 18 முதல் பிப். 2 வரை நடைபெற்றன. இப்போட்டிகளில் தமிழகத்தைச் சார்ந்த கு. கமாலினி இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். அவர்தான் விளையாடிய ஏழு போட்டிகளில் ஒரு அரைச்சதம், 143 ரன்கள், 2 கேட்சுகள், 4 ஸ்டம்பிங் என நிகழ்த்தி அசாத்திய சாதனைகள் புரிந்துள்ளார். இந்த போட்டிகளில் கமாலினியின் பங்களிப்பால் இந்திய அணி கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
What's Your Reaction?