காந்தா ராவ் ஹீரோவாக அறிமுகமான ‘வஞ்சம்’

தமிழ், தெலுங்கில் முதல் பேசும் படமான ‘காளிதாஸை’ இயக்கிய ஹனுமப்பா முனியப்பா ரெட்டி என்ற ஹெச்.எம்.ரெட்டி, நடிகை கண்ணாம்பா மற்றும் பி.என்.ரெட்டியுடன் இணைந்து ரோகிணி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.

Dec 5, 2024 - 07:40
 0  3
காந்தா ராவ் ஹீரோவாக அறிமுகமான ‘வஞ்சம்’

தமிழ், தெலுங்கில் முதல் பேசும் படமான ‘காளிதாஸை’ இயக்கிய ஹனுமப்பா முனியப்பா ரெட்டி என்ற ஹெச்.எம்.ரெட்டி, நடிகை கண்ணாம்பா மற்றும் பி.என்.ரெட்டியுடன் இணைந்து ரோகிணி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வந்தார். இந்த நிறுவனம் மூலம் தயாரித்த படங்களில் பல புதுமுகங்களை அறிமுகம் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த காந்தாராவை, ‘வஞ்சம்’ படம் மூலம் ஹீரோவாக்கியவரும் அவரே! வஞ்சம் படத்தை தெலுங்கில் 'பிரதிக்னா' (Pratigna) என்ற பெயரில் உருவாக்கினார்கள்.

அந்தக் கால படங்களில் எம்.ஜி.ஆரைப் போலவே வாள் சண்டைக் காட்சிகளில் கலக்கியவர் காந்தா ராவ். அவர், தமிழில் ‘மாய மோதிரம்’ உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். விட்டலாச்சாரியாவின் பெரும்பாலான படங்களில் இவரை பார்த்திருக்க முடியும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow