கவினின் ‘கிஸ்’ படத்திலிருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகல்

கவின் நடிக்கும் ‘கிஸ்’ படத்திலிருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Nov 22, 2024 - 15:45
 0  4
கவினின் ‘கிஸ்’ படத்திலிருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகல்

சென்னை: கவின் நடிக்கும் ‘கிஸ்’ படத்திலிருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய திரையுலகில் பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத். அவருடைய இசைக்காக பல்வேறு படக்குழுவினர் காத்திருக்கிறார்கள். தற்போது ‘கிஸ்’ படத்தில் இருந்து அனிருத் விலகியிருக்கிறார். அவருக்கு பதிலாக ஜென் மார்டின் இசையமைப்பாளராக பொறுப்பேற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow