கன்னி ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - விஸ்வரூப வெற்றி..!
கன்னி ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - விஸ்வரூபம், வெற்றி...!

கன்னி மனதுக்கு சரியென தோன்றுவதை திட்டவட்டமாக செய்து முடிக்கும் ஆற்றலுடையவர்களே! உங்கள் ராசிக்கு 4-ம் வீடான சுக வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால் இழுபறியாக இருந்த வேலைகள் விரைந்து முடியும். மனக்குழப்பம் நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கனிவான பேச்சால் காரியங்களை சாதிப்பீர்கள்.
புத்தாண்டின் தொடக்கம் முதல் 17.05.2025 வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும், ராசிக்கு 7-ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் தலைச்சுற்றல், தூக்கமின்மை, செரிமானக் கோளாறு, மனஇறுக்கம் வந்து செல்லும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். மனைவிக்கு உடல்நலக் குறைவு ஏற்படலாம்.ஆனால் 18.05.2025 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு கேது விலகி 12-ம் வீட்டிலும், ராகு 6-ம் வீட்டிலும் அமர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையிலிருந்து விடுபடுவீர்கள். இனி உற்சாகத்துடன் வலம் வருவீர்கள். மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். திருமணத் தடைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.
What's Your Reaction?