கனடாவின் டொரன்டோ, வான்கூவர் உள்ளிட்ட நகரங்களில் 14 இந்திய தூதரக முகாம்கள் மூடல்

கனடாவில் இந்திய தூதரகங்கள் ஏற்பாடு செய்திருந்த முகாம்களுக்கு பாதுகாப்பு வழங்க அந்நாட்டு அரசு மறுத்துள்ளது

Nov 11, 2024 - 15:45
 0  4
கனடாவின் டொரன்டோ, வான்கூவர் உள்ளிட்ட நகரங்களில் 14 இந்திய தூதரக முகாம்கள் மூடல்

புதுடெல்லி: கனடாவில் இந்திய தூதரகங்கள் ஏற்பாடு செய்திருந்த முகாம்களுக்கு பாதுகாப்பு வழங்க அந்நாட்டு அரசு மறுத்துள்ளது. இதன்காரணமாக டொரன்டோ, வான்கூவர் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற இருந்த 14 சிறப்பு முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியா - கனடா உறவில் இது மேலும் விரிசலை ஏற்படுத்திஉள்ளது.

கனடாவை சேர்ந்த காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக அந்த நாட்டு அரசு குற்றம்சாட்டி வருகிறது. இந்தவிவகாரம் தொடர்பாக இரு நாடுகளும் கடந்த மாதம் பரஸ்பரம் தூதரக அதிகாரிகளை வெளியேற்றின.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow