கனடா திருவிழாவில் பங்கேற்றவர்கள் மீது கார் தாறுமாறாக மோதியதில் 9 பேர் உயிரிழப்பு
கனடாவில் நடந்த திருவிழாவில் பங்கேற்றவர்கள் மீது எஸ்யுவி கார் தாறுமாறாக ஓடியதில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

வான்கூவர்: கனடாவில் நடந்த திருவிழாவில் பங்கேற்றவர்கள் மீது எஸ்யுவி கார் தாறுமாறாக ஓடியதில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
கனடாவின் வான்கூவர் நகரில் நேற்று முன்தினம் லாபு லாபு தினம் கொண்டாடப்பட்டது. 16-ம் நூற்றாண்டில் ஸ்பெயின் காலனித்துவத்தை எதிர்த்து போரிட்ட பிலிப்பைன்ஸ் தலைவரை நினைவுகூரும் வகையில் பிலிப்பைன்ஸ் மக்களால் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
What's Your Reaction?