கணினி அவசர நிலைக் குழு மூலம் தமிழகத்தில் 80,000 ஐபி முகவரிகள் முடக்கம்!

தமிழ்​நாடு கணினி அவசரநிலை குழு மூலம், சந்​தேகத்​துக்​குரிய 80 ஆயிரம் ஐபி முகவரி​கள் முடக்​கப்​பட்​டுள்​ள​தாக தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் தெரி​வித்​துள்​ளார்.

Sep 1, 2025 - 10:45
 0  3
கணினி அவசர நிலைக் குழு மூலம் தமிழகத்தில் 80,000 ஐபி முகவரிகள் முடக்கம்!

சென்னை: தமிழ்​நாடு கணினி அவசரநிலை குழு மூலம், சந்​தேகத்​துக்​குரிய 80 ஆயிரம் ஐபி முகவரி​கள் முடக்​கப்​பட்​டுள்​ள​தாக தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக அரசின் தகவல் தொழில்​நுட்ப சொத்​துகள், சேவை​களை பாது​காக்​கும் நோக்​குடன் முதல் இணைய பாது​காப்​புக் கொள்கை கடந்த 2020-ம் ஆண்டு வெளி​யிடப்​பட்​டது. அதை தொடர்ந்​து, கிளவுட் கம்ப்​யூட்​டிங் உள்​ளிட்ட தற்​போதைய தொழில்​நுட்ப வளர்ச்​சிக்கு ஏற்ப புதிய நடை​முறை​களை சேர்க்​க​வும், புதிய டிஜிட்​டல் அச்​சுற்​று​தல்​களை எதிர்​கொள்​ள​வும் இணைய பாது​காப்​புக் கொள்கை 2.0 கடந்த 2024-ம் ஆண்டு வெளி​யிடப்​பட்​டது. இதை திறம்பட செயல்​படுத்​தும் வித​மாக, தகவல் தொழில்​நுட்​ப​வியல், டிஜிட்​டல்சேவை​கள் துறை மூலம் தமிழ்​நாடு கம்ப்​யூட்​டர் எமர்​ஜென்சி ரெஸ்​பான்ஸ் டீம் (கணினி அவசரநிலை பதில் அளிப்பு குழு) உரு​வாக்​கப்​பட்​டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow