கடகம் ராசிக்கான விசுவாவசு வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - திறமைகள் வெளிப்படும்!
கடகம் ராசிக்கான விசுவாவசு வருட தமிழ்ப்புத்தாண்டு பலன்கள் - திறமைகள் வெளிப்படும்!

கடகம்: தடைகளை உடைத்தெறியும் நெஞ்சுறுதியும், தாராள மனதுடன் எல்லோருக்கும் உதவும் குணம் கொண்டவர்கள் நீங்கள். உங்கள் ராசிக்கு 4-ல் சந்திரன் நிற்கும்போது விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால் சகல விதத்திலும் உங்களின் திறமைகள் வெளிப்படும். பழைய கடனை பைசல் செய்யும் அளவுக்கு வருமானம் உயரும். அடகிலிருந்த நகைகளையும் மீட்பீர்கள்.
பேச்சில் கம்பீரம் பிறக்கும். மகனுக்கு வெளிநாட்டில் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிமாநிலங்களில் உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு அமையும். வெகுநாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிட்டும். பங்காளிப் பிரச்சினை முடிவுக்கு வரும். அடிக்கடி தொல்லை கொடுத்து வந்த வண்டியை மாற்றிவிட்டு புதிய வாகனத்தில் பயணிப்பீர்கள். ஓரளவு வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள்.
What's Your Reaction?