கடகம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - படிப்பினை, நெளிவு சுளிவு..!
கடகம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - படிப்பினை,நெளிவு சுளிவு..!

கடகம் ஏணிப்படியாக இருந்து மற்றவர்களை ஏற்றி, உங்கள் வாழ்க்கையிலும் உயர்ந்த அந்தஸ்தைப் பிடிப்பவர்களே! உங்கள் ராசிக்கு 6-வது ராசியில் இந்தாண்டு பிறப்பதால் எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். தம்பதிக்குள் பாசம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயமுண்டு.
17.05.2025 வரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் கேது நிற்பதால் எதையும் திட்டமிட்டு செய்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வேற்றுமதத்தை சேர்ந்தவர்களால் உதவிகள் உண்டு. ராசிக்கு 9-ம் வீட்டில் ராகு நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். தந்தைவழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரும். 18.05.2025 முதல் வருடம் முடியும் வரை கேது உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டிலும், ராகு 8-ம் வீட்டிலும் அமர்வதால் சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். கண்ணை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
What's Your Reaction?