கங்குவா படத்துக்கு தடை கோரி குவியும் வழக்குகள்: ரூ.20 கோடியை செலுத்த ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துக்கு உத்தரவு

நடிகர் சூர்யா நடித்துள்ள 'கங்குவா’ படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரி்த்துள்ளது. நாளை (நவ.14) வெளியாகும் இந்தப் படத்துக்கு தடை கோரி ஏற்கெனவே ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

Nov 13, 2024 - 10:05
 0  7
கங்குவா படத்துக்கு தடை கோரி குவியும் வழக்குகள்: ரூ.20 கோடியை செலுத்த ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துக்கு உத்தரவு

நடிகர் சூர்யா நடித்துள்ள 'கங்குவா’ படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரி்த்துள்ளது. நாளை (நவ.14) வெளியாகும் இந்தப் படத்துக்கு தடை கோரி ஏற்கெனவே ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதில், ரூ.99 கோடி கடனாக கொடுத்த நிலையில் ரூ.54 கோடி பாக்கியுள்ளதாக தெரிவித்திருந்தது. உயர் நீதி்மன்ற உத்தரவுப்படி அந்நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ.54 கோடியை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் செலுத்தியது.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவர் இறந்து விட்டதால் அவருடைய சொத்துக்களை சென்னை உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து வருகிறார். அதன்படி அர்ஜூன்லால் சுந்தர்தாஸிடம் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் பங்குதாரர்களான ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோர் கடந்த 2013-ம் ஆண்டு ரூ.10.35 கோடி கடன் வாங்கிய நிலையில், அதை வட்டியுடன் திருப்பிச் செலுத்த சொத்தாட்சியர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி அந்த தொகையை திருப்பி செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், பணத்தை திருப்பிச் செலுத்தவில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow