‘ஓபன் ஏஐ’ உடன் கைகோத்த பார்பி பொம்மை தயாரிப்பு நிறுவனமான ‘மேட்டல்’ - திட்டம் என்ன?
செயற்கை நுண்ணறிவின் துணையோடு பொம்மைகள் மற்றும் மொபைல் கேம்ஸ்களை வடிவமைக்கும் நோக்கில் ‘ஓபன் ஏஐ’ நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது பார்பி பொம்மையை தயாரித்து, உலக அளவில் விற்பனை செய்யும் ‘மேட்டல்’ நிறுவனம். அது குறித்து விரிவாக பார்ப்போம்.

லாஸ் ஏஞ்சல்ஸ்: செயற்கை நுண்ணறிவின் துணையோடு பொம்மைகள் மற்றும் மொபைல் கேம்ஸ்களை வடிவமைக்கும் நோக்கில் ‘ஓபன் ஏஐ’ நிறுவனத்துடன் கைகோத்துள்ளது பார்பி பொம்மையை தயாரித்து, உலக அளவில் விற்பனை செய்யும் ‘மேட்டல்’ நிறுவனம். அது குறித்த விரைவுப் பார்வை இது.
மேட்டல் நிறுவனம் ஹாட் வீல்ஸ் கார்ஸ் மற்றும் யூனோ கார்டுகளையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்றைய டிஜிட்டல் காலத்துக்கு ஏற்ப நவீனத்துவம், பிரைவசி மற்றும் புதுமையை தங்கள் சார்ந்துள்ள தொழிலில் கொண்டு வரும் வகையில் ஓபன் ஏஐ உடன் இணைந்துள்ளதாக மேட்டல் நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வர்த்தக ரீதியான கொள்கை காரணமாக பொம்மை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் வணிகம் மந்த நிலையில் உள்ளது. இந்த சூழலில்தான் மேட்டல் இந்த நகர்வை முன்னெடுத்துள்ளது.
What's Your Reaction?