ஒரே நாளில் ரூ.299 கோடி அதிகரித்த அதானியின் சொத்து மதிப்பு!

அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு வெள்ளிக்கிழமை அன்று பங்குச் சந்தையில் ஏற்றம் கண்டது.

Sep 20, 2025 - 22:40
 0  14
ஒரே நாளில் ரூ.299 கோடி அதிகரித்த அதானியின் சொத்து மதிப்பு!

மும்பை: அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு வெள்ளிக்கிழமை அன்று பங்குச் சந்தையில் ஏற்றம் கண்டது. அதன் பலனை அதானி குழுமத்தின் நிறுவன தலைவரான கவுதம் அதானி அறுவடை செய்துள்ளார்.

அவரது சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.299 கோடி அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் முதலான தொழில்களில் ஈடுபட்டு வருகிறார் கவுதம் அதானி. 63 வயதான அவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். தற்போது அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 87.4 பில்லியன் டாலர்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow