ஐரோப்பாவின் பொருளாதார தடையை சமாளிக்க உரிய நடவடிக்கை: வெளியுறவு செயலாளர் தகவல்

ரஷ்ய கச்சா எண்ணெய் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார தடையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

Jul 23, 2025 - 03:30
 0  4
ஐரோப்பாவின் பொருளாதார தடையை சமாளிக்க உரிய நடவடிக்கை: வெளியுறவு செயலாளர் தகவல்

புதுடெல்லி: ரஷ்ய கச்சா எண்ணெய் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார தடையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்த சூழலில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை தடுக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. இதில் குஜராத்தை சேர்ந்த நயாரா எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீதும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow