“ஐயம் ஸாரி ஐயப்பா, அறிவு புகட்டி அனுப்பப்பா” - இசைவாணிக்கு எம்.எஸ்.பாஸ்கர் எதிர்ப்பு
பிரபல கானா பாடகி இசைவாணி, இயக்குநர் பா.ரஞ்சித் கடந்த 2019-ம் ஆண்டு நடத்திய நிகழ்ச்சியில், ‘ஐயம் ஸாரி ஐயப்பா’' என்ற பாடலைப் பாடினார்.

பிரபல கானா பாடகி இசைவாணி, இயக்குநர் பா.ரஞ்சித் கடந்த 2019-ம் ஆண்டு நடத்திய நிகழ்ச்சியில், ‘ஐயம் ஸாரி ஐயப்பா’' என்ற பாடலைப் பாடினார். இந்தப் பாடலை பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடி வந்தார். இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி இருக்கிறது. இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. பாடகி இசைவாணி, இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோரை கைது செய்யக்கோரி புகாரும் அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், இசைவாணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இசைவாணி பாடியிருந்த 'ஐயம் ஸாரி ஐயப்பா' பாடலை சமீபத்தில் கேட்டேன். சுவாமி ஐயப்பனிடம் மன்னிப்புக் கேட்டு பாடத் தொடங்கிய விதம் அருமை, நல்ல குரல் வளம். ஆடிக்கொண்டே பாடிய ஸ்டைல் அற்புதம். ஒரே ஒரு குறை, பாடல் தெளிவாகக் கேட்காத அளவுக்கு வாத்தியங்களின் ஓசை அதிகம். இது போன்ற கருத்தாழமுள்ள பாடல்களை சபரிமலை அருகிலேயே மேடையிட்டு, விஷு, மகரஜோதி போன்ற விசேஷ நேரங்களில் பாடுவது இன்னும் சிறப்பாக இருக்கும். இவர்களுக்கும் 'பூசை' சிறப்பாக நடக்கும்.
What's Your Reaction?