ஐசிசி ‘ஹால் ஆஃப் ஃபேம்’-ல் தோனி: இந்தப் பட்டியலில் இணைந்த 11-வது இந்தியர்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்பட்டார். லண்டனில் திங்கள்கிழமை (ஜூன் 9) நடைபெற்ற நிகழ்வில் இந்த அறிவிப்பு வெளியானது. 

Jun 9, 2025 - 23:40
 0  2
ஐசிசி ‘ஹால் ஆஃப் ஃபேம்’-ல் தோனி: இந்தப் பட்டியலில் இணைந்த 11-வது இந்தியர்!

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்பட்டார். லண்டனில் திங்கள்கிழமை (ஜூன் 9) நடைபெற்ற நிகழ்வில் இந்த அறிவிப்பு வெளியானது.

தற்போது 5 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் 2 கிரிக்கெட் வீராங்கனைகள் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே இந்தப் பட்டியலில் 115 பேர் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 11-வது இந்தியர் ஆகியுள்ளார் தோனி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow