ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ‘ரத்து’ - அடுத்து என்ன?

ஏமன் நாட்டில் கேரள மாநில செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேரளா​வின் இஸ்​லாமிய மதத் தலை​வர் அபுபக்​கர் முஸ்​லி​யாரின் ‘கிராண்ட் முப்தி’ அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

Jul 29, 2025 - 09:15
 0  4
ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ‘ரத்து’ - அடுத்து என்ன?

சனா: ஏமன் நாட்டில் கேரள மாநில செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேரளா​வின் இஸ்​லாமிய மதத் தலை​வர் அபுபக்​கர் முஸ்​லி​யாரின் ‘கிராண்ட் முப்தி’ அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

செவிலியர் நிமிஷா பிரியா விவகாரத்தில் அபுபக்​கர் முஸ்​லி​யார் மத்​தி​யஸ்​தம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், இந்திய அரசு தரப்பில் நிமிஷாவின் விவகாரத்தை கவனித்து வரும் அதிகாரிகள், மரண தண்டனை ரத்து குறித்து இன்னும் உறுதி செய்யவில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow