ஏமனில் இஸ்ரேல் தாக்குதல்: ஹவுதி அரசின் பிரதமர் அஹமத் அல்-ராஹாவி கொல்லப்பட்டார்

ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி அரசின் பிரதமர் அஹமத் அல்-ராஹாவி கொல்லப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சிப் படை சனிக்கிழமை அன்று அறிவித்தது.

Aug 30, 2025 - 23:05
 0  3
ஏமனில் இஸ்ரேல் தாக்குதல்: ஹவுதி அரசின் பிரதமர் அஹமத் அல்-ராஹாவி கொல்லப்பட்டார்

சனா: ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி அரசின் பிரதமர் அஹமத் அல்-ராஹாவி கொல்லப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சிப் படை சனிக்கிழமை அன்று அறிவித்தது. இந்த தாக்குதல் ஏமன் தலைநகர் சனாவில் நடந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை அன்று இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹவுதி அரசின் அமைச்சர்கள் மற்றும் பிரதமர் அஹமத் அல்-ராஹாவி கொல்லப்பட்டதாக ஹவுதி படை தெரிவித்துள்ளது. இதை அன்றைய தினம் இஸ்ரேல் பாதுகாப்பு படையும் உறுதி செய்திருந்தது. ‘ஹவுதி தீவிரவாத படையின் முக்கிய இடத்தின் மீது துல்லிய தாக்குதல் மேற்கொண்டோம்’ என இஸ்ரேல் தெரிவித்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow