ஏஐ துறை ஆலோசகராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை நியமித்த ட்ரம்ப்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை அமெரிக்க ஏஐ தொழில்நுட்பத் துறை கொள்கை ஆலோசகராக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப்.

Dec 23, 2024 - 12:00
 0  15
ஏஐ துறை ஆலோசகராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை நியமித்த ட்ரம்ப்

வாஷிங்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை அமெரிக்க ஏஐ தொழில்நுட்பத் துறை கொள்கை ஆலோசகராக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப்.

வெள்ளை மாளிகையின் அறிவியல் தொழிநுட்ப கொள்கை துறையின் ஏஐ பிரிவின் மூத்த கொள்கை ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணன் செயல்படுவார் என்று ட்ரம்ப் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். கிருஷ்ணன் ஏற்கெனவே மைக்ரோசாஃப்ட், ட்விட்டர், யாஹு, பேஸ்புக், ஸ்நாப் போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். அவர் டேவிட் ஓ சாக்ஸுடன் இணைந்து பணிபுரிவார். டேவிட் சேக்ஸ் வெள்ளை மாளிகை ஏஐ, கிரிப்டோ துறை தலைவராக செயல்படுவார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow