''எல்லை கட்டுப்பாடு கோடு அருகே இந்தியா தாக்கலாம்'' - பாக். அமைச்சர் கவாஜா ஆசிப் எச்சரிக்கை

எல்லைக்கட்டுப்பாடு கோட்டின் எந்த ஒரு இடத்திலும் இந்தியா தாக்குதல் நடத்தலாம் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பின்பு இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

May 6, 2025 - 15:05
 0  4
''எல்லை கட்டுப்பாடு கோடு அருகே இந்தியா தாக்கலாம்'' - பாக். அமைச்சர் கவாஜா ஆசிப் எச்சரிக்கை

இஸ்லாமாபாத்: எல்லைக்கட்டுப்பாடு கோட்டின் எந்த ஒரு இடத்திலும் இந்தியா தாக்குதல் நடத்தலாம் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பின்பு இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கவாஜா ஆசிப், "எல்லைக் கட்டுப்பாடு கோட்டின் எந்த இடத்திலும் இந்தியா தாக்குதல் நடத்தலாம் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. அந்தத் தாக்குதல் (பஹல்காம் தாக்குதல்) சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு சர்வதேச விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ஏற்கனவே கேட்டுள்ளது. அவ்வாறு நடந்தால் தாக்குதலில் இந்தியாவா வேறு ஏதாவது குழுக்கள் சம்பந்தப்பட்டுள்ளதா என்பது வெளிப்படும். பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியா ஆதாரமற்று குற்றம் சாட்டுவதும் தெளிவாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow