எச்1பி விசா கட்டணம் ரூ.88 லட்சமாக அதிகரிப்பு: அமெரிக்காவில் இன்று முதல் அமல் - முழு விவரம்

அமெரிக்காவின் எச்1பி விசாவுக்கான ஓராண்டு கட்டணம் ரூ.1.32 லட்சத்தில் இருந்து திடீரென ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Sep 21, 2025 - 09:35
 0  10
எச்1பி விசா கட்டணம் ரூ.88 லட்சமாக அதிகரிப்பு: அமெரிக்காவில் இன்று முதல் அமல் - முழு விவரம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் எச்1பி விசாவுக்கான ஓராண்டு கட்டணம் ரூ.1.32 லட்சத்தில் இருந்து திடீரென ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், கணினி மென்பொருள் துறையில் பணியாற்றி வரும் ஏராளமான இந்தியர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. விடுப்புக்காக இந்தியா சென்றுள்ள ஊழியர்கள் உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்புமாறு ஐ.டி. நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளன.

அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட சிறப்பு பணித் திறன்கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த விசா வழங்கப்படும். ஓராண்டில் 65,000 எச்1பி விசாக்களை அமெரிக்க அரசு விநியோகம் செய்கிறது. மேலும், அமெரிக்க உயர் கல்வி நிறுவனங்களில் படித்த வெளிநாட்டு மாணவர்களுக்கு 20,000 எச்1 பி விசா வழங்கப்படுகிறது. இதன்படி, ஓராண்டில் மொத்தம் 85,000 எச்1பி விசாக்கள் வழங்கப்படுகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow