''ஊழலை முடிவுக்குக் கொண்டுவர பாடுபடுவேன்'' - நேபாள பிரதமர் சுசீலா கார்கி உறுதி
நேபாளத்தில் இடைக்கால பிரதமராக தனது பணியை தொடங்கிய சுசீலா கார்கி, “ஊழலை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற போராட்டக்காரர்களின் கோரிக்கைகளைப் பின்பற்றுவேன்” என்று சபதம் செய்தார்.

காத்மாண்டு: நேபாளத்தில் இடைக்கால பிரதமராக தனது பணியை தொடங்கிய சுசீலா கார்கி, “ஊழலை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற போராட்டக்காரர்களின் கோரிக்கைகளைப் பின்பற்றுவேன்” என்று சபதம் செய்தார்.
நேபாள நாட்டில் ‘ஜென் ஸி’ இளைஞர்கள் நடத்திய தீவிர போராட்டங்களால் சில நாட்களுக்கு முன்பு பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது. இதனால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ’ஜென் ஸி’ இளைஞர்களின் ஆதரவுடன், நாட்டின் இடைக்கால பிரதமராக நேபாள உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி கடந்த செப். 12ஆம் தேதி பொறுப்பேற்றார்.
What's Your Reaction?