உதயணன் வாசவதத்தா: பாகவதர் சிறை சென்றதால் மாறிய ஹீரோ
உமா பிக்சர்ஸ் மூலம் படங்கள் தயாரித்து வந்த ஆர்.எம்.ராமநாதன் செட்டியார், தியாகராஜ பாகவதரின் நெருங்கிய நண்பர். சென்னையில் இருந்த நியூடோன் ஸ்டூடியோவின் நிறுவனர்களில் ஒருவராகவும் இருந்த அவருக்கு, ‘ஆடியோகிராஃபி’யில் தீவிர ஆர்வம்.

உமா பிக்சர்ஸ் மூலம் படங்கள் தயாரித்து வந்த ஆர்.எம்.ராமநாதன் செட்டியார், தியாகராஜ பாகவதரின் நெருங்கிய நண்பர். சென்னையில் இருந்த நியூடோன் ஸ்டூடியோவின் நிறுவனர்களில் ஒருவராகவும் இருந்த அவருக்கு, ‘ஆடியோகிராஃபி’யில் தீவிர ஆர்வம். அதனால் தனது நிறுவனம் மூலம் தயாரித்த பெரும்பாலான படங்களில் ‘ரெக்கார்டிஸ்டா’கவும் பணியாற்றினார். அவர் தயாரித்த ‘உதயணன் வாசவதத்தா’ படத்திலும் அப்படித்தான்.
இது புராணம் கலந்த கற்பனை கதை. உத்தர பிரதேசத்தில் கங்கை மற்றும் யமுனை ஆற்றின் அருகில் அமைந்திருந்த வச்த நாட்டை ஆண்டவன், உதயணன். இன்றைய கோசாம்பிதான் அதன் தலைநகர். வீணை வாசிப்பதில் திறமையானவனான உதயணனின் இசையை கேட்டு, யானைகள் கூட அசைவின்றி நிற்கும். அவன், இளவரசி வாசவதத்தாவைக் காதலித்து வருகிறான். இதற்கிடையே உதயணனுக்கு ஒரு தெய்வீக யானையை பரிசாக அளிக்கிறார் இந்திரன். உதயணன் செய்யும் தவறால், அது அவரை விட்டுச் சென்று விடுகிறது. மனம் வருந்தும் உதயணன் அதைத் தேடிச் செல்கிறார்.
What's Your Reaction?