உக்ரைன் போரை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: புதினுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

உக்​ரைனுக்கு எதி​ரான போரை ரஷ்யா நிறுத்​தா​விட்​டால் மோச​மான விளைவு​களை சந்​திக்க நேரிடும் என்று அமெரிக்கஅதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்​ர​வரி மாதம் முதல் ரஷ்​யா, உக்​ரைன் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது.

Aug 15, 2025 - 06:15
 0  6
உக்ரைன் போரை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: புதினுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: உக்​ரைனுக்கு எதி​ரான போரை ரஷ்யா நிறுத்​தா​விட்​டால் மோச​மான விளைவு​களை சந்​திக்க நேரிடும் என்று அமெரிக்கஅதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்​ர​வரி மாதம் முதல் ரஷ்​யா, உக்​ரைன் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது. இப்​போதைய நிலை​யில் உக்​ரைனின் 22 சதவீத பகு​தி​களை ரஷ்யா கைப்​பற்றி உள்​ளது. கடந்த ஜனவரி​யில் அமெரிக்க அதிப​ராக பதவி​யேற்ற டொனால்டு ட்ரம்ப், இரு நாடு​கள் இடையி​லான போரை நிறுத்த தீவிர முயற்சி செய்து வரு​கிறார்.

இதுதொடர்​பாக கடந்த பிப்​ர​வரி 12, மார்ச் 18, மே 19, ஜூன் 4 ஆகிய தேதிகளில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அதிபர் ட்ரம்ப் தொலைபேசி​யில் விரி​வான பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். இதைத் தொடர்ந்து அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம், ஆங்​கரேஜ் நகரில் உள்ள ராணுவ தளத்​தில் அமெரிக்க, ரஷ்ய அதிபர்​கள் இன்று முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்த உள்​ளனர். இதுதொடர்​பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாஷிங்​டனில் நேற்று முன்​தினம் நிருபர்​களுக்கு பேட்​டியளித்​தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow