“உக்ரைன் பங்கேற்பு இல்லாத ஒப்பந்தங்களை அங்கீகரிக்க மாட்டோம்” - ஜெலென்ஸ்கி திட்டவட்டம்
உக்ரைனின் பங்கேற்பு இல்லாமல் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் என்று அதன் அதிபர் விளாடிமிர் ஜலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கீவ்: உக்ரைனின் பங்கேற்பு இல்லாமல் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த வாரம் தொலைபேசியில் பேசியதை அடுத்து, இரு நாடுகளின் உயர்மட்ட குழுக்களின் சந்திப்பு நாளை (பிப்.18) சவூதி அரேபிய தலைநகரில் நடைபெற உள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தலைமையிலான ரஷ்ய குழுவும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தலைமையிலான அமெரிக்க குழுவும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க இருக்கின்றன.
What's Your Reaction?