‘ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலில் நியாயம் ஏதும் இல்லை’ - ரஷ்ய அதிபர் புதின்

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் நியாயம் ஏதும் இல்லை என்றும், ஈரான் மக்களுக்கு ரஷ்யா உதவ முயற்சிக்கிறது என்றும் தன்னை சந்தித்த ஈரான் வெளியுறவு  அமைச்சரிடம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளார்.

Jun 23, 2025 - 22:20
 0  4
‘ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலில் நியாயம் ஏதும் இல்லை’ - ரஷ்ய அதிபர் புதின்

மாஸ்கோ: ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் நியாயம் ஏதும் இல்லை என்றும், ஈரான் மக்களுக்கு ரஷ்யா உதவ முயற்சிக்கிறது என்றும் தன்னை சந்தித்த ஈரான் வெளியுறவு அமைச்சரிடம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளார்.

ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மாஸ்கோவில் நடந்த இந்த பேச்சுவார்த்தையின்போது, இஸ்ரேல் உடனான போரின் நிலவரம் குறித்து அப்பாஸ் அரக்சியிடம் ரஷ்ய அதிபர் புதின் கேட்டறிந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow