ஈரான் தனது வான்வெளியை மீண்டும் திறந்தது; விமான சேவைகள் தொடக்கம்!

இஸ்ரேலுடனான போர் காரணமாக மூடப்பட்ட வான்வெளியை மீண்டும் திறந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இஸ்ரேல் உடனான போர் காரணமாக கடந்த ஜூன் 13-ம் தேதி ஈரான் வான்வெளி மூடப்பட்டது.

Jul 4, 2025 - 12:40
 0  2
ஈரான் தனது வான்வெளியை மீண்டும் திறந்தது; விமான சேவைகள் தொடக்கம்!

தெஹ்ரான்: இஸ்ரேலுடனான போர் காரணமாக மூடப்பட்ட வான்வெளியை மீண்டும் திறந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இஸ்ரேல் உடனான போர் காரணமாக கடந்த ஜூன் 13-ம் தேதி ஈரான் வான்வெளி மூடப்பட்டது.

இதுகுறித்து ஈரானின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் ஐஆர்என்ஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் மற்றும் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையங்களும், ஈரான் நாட்டின் வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மேலும், ஈரானில் முழுமையாக விமானங்கள் இயங்கத் தயாராக உள்ளன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow