‘ஈரான் உச்ச தலைவர் கமேனி உயிருடன் இருக்கவே கூடாது’ - இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் சீற்றம்

“ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இருக்கவே கூடாது” என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் காட்டமாக தெரிவித்துள்ளார்.

Jun 19, 2025 - 18:35
 0  3
‘ஈரான் உச்ச தலைவர் கமேனி உயிருடன் இருக்கவே கூடாது’ - இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் சீற்றம்

டெல் அவிவ்: “ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிருடன் இருக்கவே கூடாது” என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் காட்டமாக தெரிவித்துள்ளார்.

சொரோகா மருத்துவமனை தாக்குதலால் கடும் கோபமடைந்துள்ள இஸ்ரேல் எச்சரிக்கைகளை பதிவு செய்து வருகிறது. ஏற்கெனவே பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘ஈரான் மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்’ என்று கூறியிருந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், “இஸ்ரேல் ராணுவத்துக்கு நாங்கள் இலக்குகளை வகுத்துக் கொடுத்துவிட்டோம். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிருடன் இருக்கவே கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow