ஈரான் அணு சக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவின் பி-2 போர் விமானத்தின் சிறப்பு அம்சங்கள்

கடந்த 1970-களில் அதிவீன பி-2 போர் விமானத்தை தயாரிக்கும் பணியில் அமெரிக்கா களமிறங்கியது. புதிய போர் விமானத்தை தயாரிக்கும் பணி அமெரிக்காவின் நார்த்ரோப் கார்ப்பரேசனிடம் அளிக்கப்பட்டது.

Jun 23, 2025 - 07:10
 0  4
ஈரான் அணு சக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவின் பி-2 போர் விமானத்தின் சிறப்பு அம்சங்கள்

வாஷிங்டன்: கடந்த 1970-களில் அதிவீன பி-2 போர் விமானத்தை தயாரிக்கும் பணியில் அமெரிக்கா களமிறங்கியது. புதிய போர் விமானத்தை தயாரிக்கும் பணி அமெரிக்காவின் நார்த்ரோப் கார்ப்பரேசனிடம் அளிக்கப்பட்டது. கடந்த 1989-ம் ஆண்டில் பி-2 போர் விமானம் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.

உலகின் மிகச் சிறந்த போர் விமானமாக பி-2 கருதப்படுகிறது. 172 அடி அகலம், 69 அடி நீளம் கொண்ட இந்த போர் விமானத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. இதனை ரேடாரில் கண்டறிய முடியாது. அணு குண்டுகள் மற்றும் மிகப்பெரிய வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow