ஈரானில் இதுவரை 639 பேர் உயிரிழப்பு; 2,000 பேர் படுகாயம்: 20 அணு சக்தி தளங்கள், 16 எண்ணெய் வயல்கள் அழிந்தன

இஸ்​ரேல் விமானப் படை தாக்​குதலில் ஈரானில் இது​வரை 639 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 2,000-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​துள்​ளனர். ஈரானின் முக்​கிய அணு சக்தி தளங்​கள், எண்​ணெய் வயல்​களும் அழிந்​துள்​ளன.

Jun 20, 2025 - 08:00
 0  4
ஈரானில் இதுவரை 639 பேர் உயிரிழப்பு; 2,000 பேர் படுகாயம்: 20 அணு சக்தி தளங்கள், 16 எண்ணெய் வயல்கள் அழிந்தன

டெஹ்ரான்: இஸ்​ரேல் விமானப் படை தாக்​குதலில் ஈரானில் இது​வரை 639 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 2,000-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​துள்​ளனர். ஈரானின் முக்​கிய அணு சக்தி தளங்​கள், எண்​ணெய் வயல்​களும் அழிந்​துள்​ளன.

கடந்த 13-ம் தேதி அதி​காலை ஈரான் மீது இஸ்​ரேல் விமானப் படை திடீர் தாக்​குதல் நடத்​தி​யது. இரு நாடு​களிடையே 7-வது நாளாக நேற்​றும் போர் நீடித்​தது. கடந்த 7 நாட்​களில் ஈரான் தலைநகர் டெஹ்​ரான் உட்பட அந்த நாட்​டின் 1,100 இடங்​கள் மீது இஸ்​ரேல் போர் விமானங்​கள், ட்ரோன்​கள் தாக்​குதல் நடத்தி உள்​ளன. குறிப்​பாக ஈரானின் அணு சக்தி தளங்​கள், ஆயுத உற்​பத்தி ஆலைகள், எண்​ணெய் வயல்​கள் மீது மிகப்​பெரிய தாக்​குதல் நடத்​தப்​பட்டு இருக்​கிறது. இதில் ஈரானின் 20 அணுசக்தி தளங்​கள், 16 எண்​ணெய் வயல்​கள் அழிக்​கப்​பட்டு இருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.
ஈரானின் போர்டோ நகரில் மலைக்கு கீழே சுமார் 90 மீட்​டர் ஆழத்​தில் அந்த நாட்​டின் மிக முக்​கிய அணுசக்தி தளம் செயல்​படு​கிறது. இந்த தளம் மீது இஸ்​ரேல்விமானப் படை தாக்​குதல் நடத்​தி​யது. ஆனால் அதனை அழிக்க முடிய​வில்​லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow