இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி: மத்திய கிழக்கில் பதற்றம்; மோதலை கைவிட ஐ.நா கோரிக்கை

தங்கள் நாட்டின் மீதான் இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி விடியவிடிய இடைவிடாது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியதில் மத்திய இஸ்ரேலில் இருவர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Jun 14, 2025 - 12:35
 0  3
இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி: மத்திய கிழக்கில் பதற்றம்; மோதலை கைவிட ஐ.நா கோரிக்கை

தங்கள் நாட்டின் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி விடியவிடிய இடைவிடாது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியதில் மத்திய இஸ்ரேலில் இருவர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் இஸ்ரேல் - ஈரான் மோதலைக் கைவிட வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் பலவும் அதிகரிக்கும் மோதல் தொடர்பாக கவலை தெரிவித்துள்ளது.

முன்னதாக, நேற்று ஈரானின் 4 அணுசக்தி தளங்​கள், 2 ராணுவ முகாம்​களை இஸ்ரேல் திடீர் தாக்குதலில் அழித்தது. இதில், ஈரானின் 6 அணுசக்தி விஞ்​ஞானிகள், 3 ராணுவ தளப​தி​கள் உயி​ரிழந்​தனர். ‘ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்’ என்று இந்த தாக்குதலுக்கு பெயரிடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளது ஈரான்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow